வகைப்படுத்தப்படாத

தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|COLOMBO)-தொழிற்பயிற்சியை பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை ஒரு லட்சத்து 10 ஆயிரத்திலிருந்து 2 இலட்சத்து 10 ஆயிரம் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

தற்போது தொழிற்பயிற்சி நிலையங்களில் 32 சதவீதமான ஆசிரிய வெற்றிடங்கள் நிலவுகின்றன. திறமையான பயிற்சி பெற்ற ஆசிரியர்களை சேர்த்துக் கொள்வது சவாலாக அமைந்துள்ளது. அதனால், ஆலோசகர்களைப் பயிற்றுவிக்கும் ஒரு மத்திய நிலையம் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

 

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv  என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

 

Related posts

மருத்துவ சபை வளாகத்தில் இருந்து கைக்குண்டு மீட்பு

கீதாவின் மனு இன்று விசாரணைக்கு

UAE leaders perform funeral prayers for Sharjah Ruler’s son