சூடான செய்திகள் 1

தொல்பொருள் திட்டங்களை பார்வை இடுவதற்கு அனுமதி அட்டைகளை இணையத்தளம் மூலம் வழங்க வசதி

(UTV|COLOMBO) மத்திய கலாச்சார நிதியத்தினால் நிருவகிக்கப்படும் தொல்பொருள் திட்டங்களை பார்வை இடுவதற்கு இணையத்தளத்தின் அனுமதி பத்திரங்களை பெற்றுக் கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த விடயத்தில் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு காத்திரமான மற்றும் சட்ட ரீதியிலான தன்மையுடனான அனுமதிக்காக அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்ள முடிகிறது.

தொல் பொருள் நிலையங்களை பார்வை இடுவதற்கு பெரும்பாலானோர் ஈடுபடுவதினால் தேசிய வருமானத்திற்கு மத்திய கலாச்சார நிதியம் பெரிதும் உதவுகிறது. அனுமதி பத்திரங்களை வழங்கும் கரும பீடங்களில் நிலவும் நெருக்கடி நிலையை தவிர்ப்பதற்கு இதன் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கின்றது. இந்த புதிய நடைமுறை கடந்த மார்ச் மாதம் 5 ஆம் திகதி முதல் இது வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை போக்குவரத்து சபையின் வட மாகாண சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியாகியது

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 755 ஆக உயர்வு