உள்நாடு

தொற்றுக்குள்ளான கர்ப்பிணித் தாய்க்கு பிறந்த குழந்தை உயிரிழப்பு

(UTV | கொவிட்- 19) -இலங்கையில் பதிவான 415 ஆவது கொரோனா தொற்றாளராக கர்ப்பிணிப் பெண் ஒருவர் இன்று டி சொய்ஸா மகப்பேற்று வைத்தியசாலையில்  அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த கர்ப்பிணித் தாய்க்கு பிறந்த குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வயிற்றிலிருந்த குழந்தையின் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பதை கண்டறிய வைத்திய பரிசோதனைகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டினார்.

மருதானை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளார்.

Related posts

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபையில் டிரான் அலஸுக்கு எதிராக தீர்மானம்!

மின் தடை – விசாரணைக்காக குழு நியமனம்

உலக தர வரிசையில் இலங்கையின் இந்த பல்கலைக்கழகம் முதலிடம் | University Ranking Sri Lanka 2023