சூடான செய்திகள் 1

தொடர்ந்தும் சட்டவிரோதப் பொலித்தீன் பாவனை

(UTV|COLOMBO)-நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள பொலித்தீன் பாவனையைத் தடுப்பதற்கு அரசு சட்டமியற்றியுள்ளபோதிலும், சிலதரப்பினர் சட்டவிரோத பொலித்தினைத் தொடர்ந்தும் பாவனைக்குட்படுத்துவதாக பொலித்தீன் மீள்சுழற்சி சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் அரசினால் விதிக்கப்பட்டுள்ள தடை எவ்விதத்திலும் நடைமுறைப்படுத்தப்படாததால் சங்கத்தினர் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக பொலித்தீன் மீள்சுழற்சி சங்கத்தின் தலைவர் அனுர விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டவிரோத பொலித்தீன் பாவனையாளர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் கடினமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

கலஹா வைத்தியசாலையை மீளத்திறக்க 1 மாத கால அவகாசம்

UPDATE-தங்கல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நால்வர் பலி

உலக தலசீமியா தினம் இன்று