உள்நாடு

தே.அ.அ விண்ணப்பம் – எதிர்வரும் 31 க்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அறிவித்தல்

(UTV|கொழும்பு) – 2020 ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய பாடசாலை அதிபர்கள் ஊடாக குறித்த விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களில் இதுவரை ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தமது விண்ணப்பப்படிவங்களை கையளிக்கவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மேலும் 26 பேர் குணமடைந்தனர்

கொழும்பில் கொரோனா பரவல் குறைவடையலாம்

மத்திய கிழக்கிலிருந்து மேலும் சிலர் நாடு திரும்பினர்