உள்நாடு

தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த ஐனாதிபதி பணிப்பு

(UTV|COLOMBO) – நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய தரப்பினருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதனை விரைவாக கட்டுப்படுத்துவது தொடர்பில் விசேட வைத்தியர்களின் ஆசோனை பெறும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வைத்தியர்களுக்கு இடையில நேற்று(09) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது வைரஸ் தொற்றினை அடையாளம் கண்டு அவசியமான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு நிலைமைக்கும் முகம் கொடுக்க கூடிய வகையில் தேவையான அனைத்து உபகரணங்களையும் கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை இதன் போது ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

18 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

editor

சில மாகாணங்களுக்கு பனிமூட்டமான நிலை

இதுவரை 786 கடற்படையினர் குணமடைந்தனர்