உள்நாடு

தேர்தல் பாதுகாப்பு – 69,000 பொலிஸார் கடமைகளில்

(UTV|கொழும்பு) – நாளை(05) நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு கடமைகளில் 69,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் 10,500 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தேர்தல் கடமைகளுக்காக பொலிஸ் நடமாடும் சேவை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 3,069 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரஞ்சன் அடுத்த வாரம் விடுதலை

நாளாந்தம் பெறப்படும் கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

ரத்துபஸ்வல வழக்கு கம்பஹா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு