சூடான செய்திகள் 1

தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்களுடனான முக்கிய சந்திப்பு நாளை

(UTV|COLOMBO)-தேர்தல் நடாத்துவது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் கட்சித் தலைவர்களுடனான முக்கிய சந்திப்பொன்று நாளை (20)  நடைபெறவுள்ளதாக  சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்துள்ளார்.

தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுவருவதாக ஒரு கட்சியின் மீது மட்டும் குற்றச்சாட்டை சுமத்துவது கூடாது எனவும், தேர்தலைப் பிற்போடுமாறு எந்தவொரு கட்சியும் வேண்டுகோள் விடுக்கவில்லையெனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் பெறப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே தேர்தல் ஒன்றை நடாத்தாமல் பிற்போட முடியும் எனவும், அவ்வாறில்லாமல் அரசாங்கத்துக்கு தேர்தலை உரிய காலத்தில் நடாத்தாமல் ஒத்திப்போட முடியாது எனவும் கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்த போதே சபாநாயகர் நேற்று (18) பாராளுமன்றத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

‘கோவிட் 19´ – 2,663 பலி

“ஜனாதிபதித் தேர்தலே முதலில்” அமைச்சரைவில் தெளிவாக அறிவித்த ரணில்

மட்டக்களப்பு வரையான புகையிரதம் பொலன்னறுவை வரை ஸ்தம்பிதம்