உள்நாடு

 தேர்தல் தொடர்பில் இன்று இறுதி தீர்மானம்

(UTV | கொழும்பு) – தேர்தல் தொடர்பில் இன்று இறுதி தீர்மானம்

நாட்டின் அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்திற்கு அமைய சட்ட ரீதியாகவே உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களினதும் இணக்கப்பாட்டுடன் தான் தேர்தல் அறிவிக்கப்பட்டதாகவும் ,

நிதி வழங்கப்படாத காரணத்தால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (24) கூடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் தேசிய தேர்தல் ஆணைக்குழு சட்டப்பூர்வமாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும், தேர்தலை நடத்த நிதி இல்லை என்றும் நேற்று ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இந்த விடயத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முன்னாள் அமைச்சர் பௌஸிக்கு ஒத்திவைக்கப்பட்ட கடூழியச் சிறைத்தண்டனை.

editor

கிஹான் பிலபிட்டியவை நீதிமன்ற உத்தரவு இல்லாமல் கைது செய்ய முடியாது

ருஹுணு குமாரி தடம் புரள்வு