உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தல் தொடர்பில் இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான புதிய திகதியை நியமிப்பது குறித்த தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று(08) இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு எதிரான மனுக்கள் அனைத்தையும் கடந்த 2 ஆம் திகதி உயர் நீதிமன்றம் இரத்து செய்ததையடுத்து, பொதுத் தேர்தலை எந்த தினத்தில் நடத்துவது என்பது குறித்த அறிவிப்பானது கடந்த 3 ஆம் திகதி வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டிருந்த நிலையில் அன்றைய தினம் வெளியிடப்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எல்பிட்டிய தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு நாளை

பாராளுமன்றில் தற்போது ஆரம்பித்துள்ள கூட்டம்

பல்கலை மாணவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி