உள்நாடு

தேர்தலை முன்னிட்டு அழைத்துவரும் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் செயற்பாடுகள் மீளவும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலதிக செயலாளர், அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

நாளை(05) இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த நடவடிக்கைகள் எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி மேலதிக செயலாளர் தெரிவித்திருந்தார்.

பொதுத் தேர்தல் கடமைகளில் பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஆகியோர் ஈடுபடவுள்ளதால் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் செயற்பாடுகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

ரயிலில் ஏற முயன்றவர் வீழ்ந்து காலை இழந்தார் – ரிதிதென்னையில் சம்பவம்

editor

கட்டுப்பணத்தை செலுத்தினார் விஜயதாச ராஜபக்ஷ

இன்றைய தினம் மேலும் பலருக்கு கொவிட் உறுதி