வணிகம்

தேயிலை ஏற்றுமதியில் அதிகரிப்பு

(UTV|COLOMBO) – நாட்டின் தேயிலை ஏற்றுமதி கடந்த நவம்பர் மாதத்தில் அதிகரித்திருப்பதாக போப்ஸ் மற்றும் வோல்க்கர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தில் 22 மில்லியன் கிலோ கிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 6 இலட்சம் கிலோ கிராமால் இந்த ஏற்றுமதி அதிகரித்திருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் துருக்கிக்கே கூடுதலாக தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கும் கூடுதலான தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

இன்றைய தங்க விலை நிலவரம்

கொரோனாவிலும் தாக்குப்பிடிக்கும் லாம்போர்கினி

ஊரடங்குச் சட்டம் நீக்கம்; வர்த்தக நிலையங்கள் பூட்டு