வணிகம்

தேயிலை உற்பத்தி, ஏற்றுமதி வருமானம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

(UTV|COLOMBO)-இந்த ஆண்டு தேயிலை உற்பத்தி மற்றும் அதன் ஏற்றமதி வருமானம் என்பன நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட நிறுவனங்களின் ஒன்றியம் கடந்த தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி இந்த ஆண்டு மொத்தமாக 300 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தியே மேற்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

மேலும் தேயிலை ஏற்றுமதி வருமானம் 1.5 பில்லியன் டொலர்களுக்கும் குறைவாகவே பதிவாகும்.

தேயிலைத் தொழில்துறை சார்ந்தவர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக பெருந்தோட்ட நிறுவனங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

Related posts

வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி

Fitch Ratings நிறுவன பொருளாதார மதிப்பீட்டை இலங்கை நிராகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பு?