அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் பயணித்த பஸ் மீது தாக்குதல் – 4 பேர் காயம்.

இன்று (13) காலை மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த பேருந்து ஒன்று மீது இனந்தெரியா சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் மொனராகலை பிரதேச சபை மைதானத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த குழுவினர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் சிகிச்சைக்காக புத்தல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

இன்றும் மழையுடன் கூடிய வானிலை

இன்றும் நாளையும் பேலியகொட மெனிங் சந்தை திறப்பு

புகையிரதத்தில் மோதுண்ட நபர் ஸ்தலத்தில் பலி!