வகைப்படுத்தப்படாத

தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்த பாதிப்பும் இல்லை – பாதுகாப்பு செயலாளர்

(UDHAYAM, COLOMBO) – புதிய பாதுகாப்புச் செயலாளராக திரு.கபில வைத்தியரத்ன நியமிக்கப்பட்டதையடுத்து முதற்தடைவையாக கண்டி ஸ்ரீதலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

பிரதம விகாராதிபதிகளின் ஆசீர்வாதம் பெற்ற பின்னர் நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

இதன்போது , ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பாதுகாப்பு செயலாளர் பதிலளிக்கும் போது,

பாதுகாப்பு படையினர் கொடிய டெங்கு நோயிலிருந்து தேசத்தை பாதுகாப்பதற்காகவும், அதனை முற்றாக ஒழிக்கும் செயற்பாடுகளிலும், பொதுமக்களுக்கு அது தொடர்பான அறிவுறுத்தல்கள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதிலும், மருத்துவ முகாம்களை முன் னெடுத்துச்செல்வதிலும் ஈடுபட்டுவருவதாகவும் மற்றும் ஏற்கனவே அண்மையில், நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தமான வெள்ளம் மற்றும் மண்சரிவின்போது முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் அனர்த்த நிவாரணப்பணிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்ததாகவும் அது நாட்டைப்பாதுகாக்கும் தேசியரீதியிலான முயற்சி எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது,

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரினால்; தேசிய பாதுகாப்பு விடயத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் அதனை அர்ப்பணிப்புடன் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவை தனது கடமை என்றும் தெரிவித்தார்.

பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளித்தபோது,

இது சம்பந்தமான தேவையான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருவதாகவும், குறித்த விசாரணைகள் முடியும் வரை தேவையற்ற கைதுகள் இடம்பெறாது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேலும் இதன்போது தெரிவித்தார்.

Related posts

US approves Taiwan arms sale despite Chinese ire

சம்பூரில் திமிங்கிலங்கள்

‘Jumanji: The Next Level’ teases chaotic ride to jungle