சூடான செய்திகள் 1

தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்க வாய்ப்பு தாருங்கள்-அமைச்சர் டக்ளஸ்

(UTV|COLOMBO)-தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்க தனிக் கட்சி உறுப்பினர் என்ற வகையில் தனக்கு வாய்ப்பு ஒன்றை வழங்குமாறு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றில் சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

தான் ஆளும் கட்சியில் உள்ளேனா அல்லது எதிர்க் கட்சியில் உள்ளேனா என்பதை விட பாராளுமன்றத்தை பிரதிநித்துவப்படுத்தும் ஒரு தனிக்கட்சி என்ற ரீதியில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கும் வாய்ப்பு ஒன்றை வழங்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்துள்ள நிலையில் பாராளுமன்றம் கூடிய வேளையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் தற்போது தெரிவுக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் வாத பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

 

 

 

Related posts

பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நூறு வீதத்தால் அதிகரித்த மரக்கறி விலை

வினாத்தாள் கசிந்த விவகாரம் – ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம்

editor