வகைப்படுத்தப்படாத

தென்னாப்பிரிக்கா ஜனாதிபதியாக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு

(UTV|SOUTH AFRICA) தென்னாப்பிரிக்கா குடியரசு நாட்டின் பாராளுமன்றத்துக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றனர்.

அந்நிலையில் , அந்நாட்டின் ஜனாதிபதியாக சிரில் ரமபோசாவை பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மீண்டும் தேர்வு செய்தனர். ஜனாதிபதி பதவிக்கு சிரில் ரமபோசாவை தவிர வேறு யாரும் நிறுத்தப்படாத நிலையில் ஆளும்கட்சி உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் சிரில் ரமபோசா வெற்றிபெற்றதாக இந்த தேர்தலை மேற்பார்வையிட்ட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மோகோயேங் அறிவித்துள்ளார்.

 

 

 

Related posts

மலையகத்தில் மோடி

அணல் காற்றினால் 21 பேர் பலி

Over 600,000 people affected by drought – DMC