உள்நாடுபிராந்தியம்

தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு – பாலமுனை முள்ளிமலையடி பகுதியில் சம்பவம்

பாலமுனை முள்ளிமலையடி பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

நேற்று (05) மாலை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்கு உரியதான பாலமுனை முள்ளிமலையடி பகுதியில் இவ்வாறு உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மூலம் தகவல் கிடைத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தனர்.

அப்பகுதியில் வீசிய துர்நாற்றம் காரணமாக சந்தேகத்துடன் அப்பகுதிக்கு சென்ற சிலர் குறித்த சடலத்தை கண்டு பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.

சுமார் 35 முதல் 38 வரையான வயதுடையதாக மதிக்கப்படும் இச்சடலமானது கடும் நீல நிற ரீசேர்ட் அணிந்து காணப்பட்டது.

மேலும் இம்மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

-பாறுக் ஷிஹான்

Related posts

CEYPETCO விலையும் அதிகரிப்பு

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்குவதற்கான முயற்சி!

இலங்கை இராணுவத்தின் புதிய பதவிநிலை பிரதானி நியமனம்

editor