கேளிக்கை

துல்கர் ஸல்மானுடன் இணையும் தமிழ் நடிகை

(UTV | இந்தியா) – ஒரு காலத்தில் டாப் ஹீரோயினாகவும், அஜித், விஜய், விக்ரம், சூர்யா ஆகியோருக்கு ஜோடியாக கலக்கி வந்தவர் நடிகை ஜோதிகா. சூர்யாவுடன் திருமணத்திற்கு பின் 6 வருடங்கள் கழித்து 36 வயதினிலே படம் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் Re entry கொடுத்தார்.

அதன் பின் மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி என ஹீரோயினை மையப்படுத்திய படங்களில் நடித்து வந்த அவர் செக்கச்சிவந்த வானம், தம்பி ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.

கடந்த 2020 ல் பொன்மகள் வந்தாள் படத்திற்கு பின் தற்போது மீண்டும் 36 வயதினிலே படத்தின் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் உடன் இணைந்துள்ளாராம்.

இப்படத்தில் மலையாள சினிமா ஹீரோ துல்கர் சல்மான் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

Related posts

விலையுயர்ந்த ஆடம்பர பரிசு கொடுத்த அந்த பிரபல நடிகர்?

சிம்புவுக்கு ஜோடியாகும் கீர்த்தி

உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்த மிரட்டும் Jurassic World: Fallen Kingdom ட்ரைலர் இதோ