வகைப்படுத்தப்படாத

துப்பாக்கி தவறுதலாக இயங்கியதால் காவற்துறை அதிகாரி காயம்

(UDHAYAM, COLOMBO) – கப்பம் கோரிய நபரொருவரை கைது செய்ய சென்ற வேளை துப்பாக்கி தவறுதலாக இயங்கியதால் காவற்துறை அதிகாரியொருவர் காயமடைந்துள்ளார்.

அவர் தற்போது கேகாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

நேற்று இரவு ஹெட்டிமுல்ல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மேலும் ஒருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில், ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தற்போது காவற்துறை பாதுகாப்பின் கீழ் கேகாலை மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கப்பம் கோரியவரை கைது செய்ய முற்பட்ட வேளை ஏற்பட்ட முறுகல் நிலையால் காவற்துறை அதிகாரியின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியுள்ளது.

இதனால் காயமடைந்துள்ளவர் கேகாலை காவற்துறை நிலையத்தில் சேவை புரியும் காவற்துறை அதிகாரி என தெரியவந்துள்ளது.

Related posts

ஜப்பான் இலங்கைக்கான தூதரக அதிகாரிகள் கிளிநொச்சி விஜயம்

Boris Johnson’s Brexit policy ‘unacceptable’ – EU negotiator

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் பட்டினிச்சாவு…