வகைப்படுத்தப்படாத

தீர்மானம் அறிவிக்கப்பட்ட தினத்தில் ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன – வடக்கு முதல்வர்

(UDHAYAM, COLOMBO) – அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்ட தினத்தில், காரியாலயங்களில் ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் முதலமைச்சரை  நேற்று சந்தித்த நிலையில், பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

இதேவேளை, குற்றமற்ற அமைச்சர்கள் தொடர்பில் தாம் உத்தரவாதம் அளிக்க தயாரில்லை என எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அவரால் வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரனுக்கு அனுப்பிய பதில் கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணை தொடர்பாக இரண்டு அமைச்சர்களினதும் நடத்தையையிட்டு தான் உத்தரவாதமளிக்க வேண்டுமென்று எவ்வாறு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை தன்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சட்டரீதியானதும் சுதந்திரமானதுமான விசாரணைக்குத் தடைகள் எதனையும் ஏற்படுத்தக்கூடாது என தான் குறித்த இரு அமைச்சர்களுக்கும் நிச்சயமாக ஆலோசனை வழங்குவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் முதலமைச்சரால் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள திருத்த நடவடிக்கைகள் தாமதியாது எடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அந்த கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, குற்றமற்ற அமைச்சர்கள் தொடர்பான நடவடிக்கைகளில் காலதாமதம் ஏற்படுத்தாமல் நிபந்தனைகள் அற்ற சமதான முயற்சிக்கு முன்வரவேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

Related posts

பாகிஸ்தான் vs பங்களாதேஷ்; பங்களாதேஷ் அணி அறிவிப்பு

ඉන්ධන මිල සූත්‍ර කමිටුව අද රැස්වීමට සුදානම්

ரஷியா தேவாலயத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 5 பெண்கள் பலி