உள்நாடு

 தீக்குளித்த பெண் (24 வயது)  – காப்பாற்ற சென்ற கணவனுக்கு நடந்த கதி?

(UTV | பேருவளை ) –  தீக்குளித்த பெண் (24 வயது)  – காப்பாற்ற சென்ற கணவனுக்கு நடந்த கதி?

உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த நிலையில், தீயை அணைக்கச் சென்ற கணவருக்கும் தீக்காயம் ஏற்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேருவளை சமத் மாவத்தையில் வசிக்கும் 28 மற்றும் 24 வயதுடைய திருமணமான தம்பதியரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நான்கு பிள்ளைகளின் தாய் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தம்பதிகள் இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக நேற்று மதியம் தகராறு ஏற்பட்டு, மனைவி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணின் உடலில் தீப்பற்றியதால், தீயை அணைக்க முயன்ற கணவருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மனைவியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை பிரதான பொலிஸ் பரிசோதகர் லலித் பத்மகுமாரவின் பணிப்புரைக்கமைய, பொலிஸ் பரிசோதகர் கயான் கிரிஷாந்த தலைமையில் குற்றப் பிரிவினர் குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று நள்ளிரவுடன் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்படுவதாக அறிவிப்பு

editor

தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக ஜயந்த டி சில்வா

கொழும்பு – ஷாங்காய் விமான சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்