உள்நாடு

 திலினி பிரியமாலி அசாதாரண சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்?

(UTV | கொழும்பு) –  திலினி பிரியமாலி அசாதாரண சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்

பாரிய நிதிக் குற்றச்சாட்டுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி, அசாதாரண சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் நேற்று (6) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். சட்டத்தரணி மஞ்சு ஸ்ரீ சந்திரசேன இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.

இவ்வாறு சிறைச்சாலை அதிகாரிகளின் இந்த வழக்கத்துக்கு மாறான உடல் சோதனைகளால் திலினி பிரியாமாலியின் அந்தரங்க உறுப்புகளிலும் காயம் ஏற்றப்பட்டுள்ளதாகவும், அதற்கான மருந்தையும் சிறைச்சாலை வைத்தியசாலை வழங்கியதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், திலினி பிரியாமாலியிடம் கைத்தொலைபேசி இருப்பதைக் கண்டறிந்த சிறைச்சாலை அவசரகால அதிரடிப் படை அதிகாரிகள் அவரிடம் வழமைக்கு மாறான முறையில் அடிக்கடி சோதனை நடத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி உரை

கப்ராலுக்கு வௌிநாடு செல்ல தடை

PANDORA PAPERS ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை