உள்நாடு

திரையரங்க உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

(UTV|கொழும்பு) – திரையரங்குகளில் திரைப்படங்களை காட்சிப்படுத்தும் போது தேர்தல் பிரச்சார விளம்பரங்களை காட்சிப்படுத்த அனுமதி வழங்கக் கூடாது என பதில் பொலிஸ்மா அதிபர் திரையரங்க உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் பிரச்சார விளம்பரங்களுக்காக திரையரங்குகளைப் பயன்படுத்தப்படுவதை தவிர்க்குமாறு தேர்தல் ஆணைக்குழுவால் தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், திரையரங்குகளில் திரைப்பட ஆரம்பத்தின் போது அல்லது திரைப்படத்திற்கு இடையில் வேட்பாளர்களின் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படுதல் குற்றமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் இவ்வாறான பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பது தொடர்பில் கண்காணிக்க நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ்மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related posts

இன்று 36 மணிநேர நீர்வெட்டு

 07 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம்

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இவ்வார இறுதியில்..?