கேளிக்கை

திரையரங்குகளில் தேசிய கீதத்தை இசைக்க செய்வதை கட்டாயமாக்க கோரிக்கை

(UTV|COLOMBO)-திரையரங்குகளில் திரைப்படங்களை திரையிட முன்னர் தேசிய கீதத்தை இசைக்க செய்வதை கட்டாயமாக்குமாறு பல தரப்புக்களில் இருந்து கோரிக்கை வந்துள்ளதாக தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.

திரைப்படங்களை விநியோகம் செய்யும் உரிமை நீதிமன்றத்தின் ஊடாக திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்கு கிடைத்த பின்னர் அதனை கட்டாயமாக்க நடவடிக்கை எடுப்பதாக திரைப்பட கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் எம்.என்.ஆர். அபேவர்தன கூறியுள்ளார்.

பாரம்பரிய ரீதியாக சில திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவதுடன், சில திரையரங்குகளில் அது இடம்பெறுவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.

விநியோக உரிமை கிடைத்ததன் பின்னர் திரையரங்குகளில் திரைப்படங்களை திரையிட முன்னர் தேசிய கீதத்தை இசைக்க செய்வதை கட்டாயமாக்குவதாக திரைப்பட கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் எம்.என்.ஆர். அபேவர்தன கூறியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ட்விட்டரில் டிரெண்டாகும் ‘BigilRing’

தனுஷுடன் இணையும் “96“ பட நாயகி

இலங்கையின் Mrs Sri Lanka for Mrs World தெரிவுக்கு Uschi Perera [PHOTOS]