கேளிக்கை

திரைத்துறை போராட்டத்தை புறக்கணித்த முன்னணி நடிகைகள்

(UTV|COLOMBO)-காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரியும் தமிழ் திரையுலகினர் சார்பில் மவுன போராட்டம் சென்னையில் நடைபெற்றது.

இதில் ரஜினி, கமல் உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்துக் கொண்டனர். மேலும் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி உள்ளிட்ட சினிமா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆனால், இந்தப் போராட்டத்தில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் திரிஷா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சமந்தா, அமலாபால் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவில்லை. ஸ்ரீபிரியா, ரேகா, சத்யப்பிரியா, கஸ்தூரி உள்ளிட்ட மூத்த நடிகைகளும், தன்ஷிகா, ரித்விகா என சில இளம் நடிகைகளும் கலந்து கொண்டனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் பெரும்பாலானவர்கள், சென்னையில் தான் வசிக்கிறார்கள். மேலும் கடந்த ஒரு மாதமாக படப்பிடிப்பு இல்லாத நிலையில், நடிகைகள் போராட்டத்தில் கலந்து கொள்ளாதது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

லண்டனில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்தும் அனிருத்

200 மில்லியனை கடந்த ரவுடி பேபி பாடல்!

அதிக சம்பளம் என்றால் இப்படியும் நடிப்பாரா?