உள்நாடு

திருத்தப்பட்ட தபால் கட்டணங்கள் இன்று முதல் அமுலுக்கு

(UTV | கொழும்பு) – திருத்தப்பட்ட தபால் கட்டணங்கள் இன்று (15) முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

இதன்படி 15 ரூபாவாக இருந்த சாதாரண கடிதத்திற்கான தபால் கட்டணம் 50 ரூபாவாக அதிகரிக்கப்பட உள்ளது.

மேலும், பதிவு செய்யப்பட்ட தபால் கட்டணம் 30 ரூபாயில் இருந்து 60 ரூபாயாகவும், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மானிய விலையில் அஞ்சல் கடிதங்கள் அனுப்பும் வசதியின் கீழ் 20 கிராம் எடையுள்ள கடிதத்திற்கான தபால் கட்டணம் 12 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

 

Related posts

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப்பிரமாணம் [முழுவிபரம்]

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு ? மனம் திறந்தார் சந்திரிக்கா

editor

க்ளைபோசைட் தடையை நீடிக்கும் வர்த்தமானி அரச அச்சகத்துக்கு