வகைப்படுத்தப்படாத

திருகோணமலையில் 7 மீனவர்கள் கைது

(UDHAYAM, COLOMBO) – திருகோணமலை ஜமாலியா கடற்பரப்பில் சோடர் பொயின்ட் என்ற இடத்தில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

நேற்று கைது செய்யப்பட்ட இவர்கள் பின்னர் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் சோலையடி-1, ஜமாலியா-1, சல்லி மற்றும் சாம்ல்தீவு-3,தம்பலகமம் 1,வெள்ளைமணல்-1 போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்கள் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இவர்களிடம் இருந்து 2 தடைசெய்யப்பட்ட வலைகளையும், 1படகையும் திருகோணமலை கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று இரவு கடற்தொழில் திணைக்களமே அம்மீனவர்களை 50000 ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதி அளித்துள்ளது.

Related posts

யாழ் பல்கலைக்கழக மாணவி திடீர் மரணம்

கேரள கனமழை-இந்தியன் வங்கி ரூ.4 கோடி நிதியுதவி

ஆர்ப்பாட்டத்தை கைவிட போவதில்லை – ஜனநாயக ஆதரவு போராட்டக்காரர்கள்