சூடான செய்திகள் 1விளையாட்டு

திமுத் கருணாரத்ன இன்று நீதிமன்றில்…

(UTV|COLOMBO) மதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன கைது செய்யப்பட்டு பின்னர் காவற்துறை பிணையில் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் காவற்துறைமா அதிபர் அவதானம் செலுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும் திமுத் கருணாரத்னவை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு காவற்துறையினர் அறிவித்துள்ளனர்.

காவற்துறை ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

பொரள்ளை, கிங்ஸ்லி வீதியில் மது போதையில் விபத்தினை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

பகிடவதை வழங்கிய குற்றச்சாட்டு-54 பேருக்கு வகுப்பு தடை..!!

பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் தபாலில்

சிறைத்தண்டனை வழங்கப்பட்ட சதொச நிறுவன முன்னாள் பதில் பொது முகாமையாளருக்கு பிணை