சூடான செய்திகள் 1

திடீர் மின் துண்டிப்பை அறிவிக்க புதிய செயலி அறிமுகம்

(UTV|COLOMBO) மின் துண்டிப்பு குறித்து உடனடியாக அறிவிப்பதற்காக புதிய தொலைபேசி செயலி அறிமுகப்படுத்த இருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மேற்படி இதனூடாக மின்சார கட்டணத்தை செலுத்துதல் மின் துண்டிப்பு தொடர்பான அறிவித்தல் முறைப்பாடுகள் முதலான பிரிவுகள் தொடர்பிலான சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று சபை தெரிவித்துள்ளது.

நாட்டின் எத்தகைய இடங்களிலும் இடம்பெறும் மின்துண்டிப்புகள் குறித்து உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிப்பதற்கு இதன் மூலம் வசதி கிடைக்கின்றது. இலங்கை மின்சார சபையின் 50ஆவது ஆண்டின் நிறைவுக்கு அமைவாக மின்சார பாவனையாளர்களுக்கு மிகவும் செயன்திறன்மிக்க சேவைகளை வழங்குவதற்காக கையடக்க தொலைபேசி மூலமான மென்பொருள்களை பயன்படுத்துவதற்கு மின்சாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

 

 

 

 

Related posts

திங்கள் முதல் 5,000 பஸ்கள், 400 ரயில்கள் சேவையில்

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாடு செல்ல இருந்த 12 பேர் கைது

பிரதமருக்கு எதிரான மனு விசாரணை ஒத்திவைப்பு