வகைப்படுத்தப்படாத

திடீர் இராஜினாமா செய்த ஈரான் வெளியுறவு அமைச்சர்

(UTV|IRAN) ஈரானின் வெளியுறவு அமைச்சராக பதவி வகித்து வந்த முகமது ஜாவத் ஷாரீப் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அவர் தனது இன்ஸ்டிராகிராம் பக்கத்தில் தெரிவிக்கையில், “பதவியில் தொடர முடியாததற்கும், எனது பதவி காலத்தில் நிகழ்ந்த தவறுகள் மற்றும் குறைபாடுகளுக்கும் நான் மன்னிப்பு கேட்கிறேன்” என குறிப்பிட்டார்.

2015-ம் ஆண்டில் ஈரானுக்கும், பிற சர்வதேச நாடுகளுக்கும் இடையே அணுசக்தி உடன்படிக்கை ஏற்படுவதற்கான பேச்சுவார்த்தையில் முகமது ஜாவத் ஷாரீப் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

13 பவுண் நகைகளுடன் தலைமறைவான தம்பதியினர் கைது

கேரட் மில்க் ஷேக்

கொள்ளுபிட்டி கடற்கரையில் மர்மமான முறையில் யுவதியொருவர் மரணம்