விளையாட்டு

தாய் மண்ணில் இலங்கை அணிக்கு தோல்வி

(UTV | காலி) – இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 10 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில், தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக இன்று துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 113 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

அதற்கமைய, 5 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில் அவுஸ்திரேலிய அணி விக்கட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸிற்காக 212 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸிற்காக 113 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலிய அணி அதன் முதலாவது இன்னிங்ஸிற்காக 321 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இங்கிலாந்து அணி 87 ஓட்டங்களால் வெற்றி..

LPL தொடரின் புதிய திகதி அறிவிப்பு

உபாதைக்கு உள்ளான இலங்கை அணி தலைவர்..