உள்நாடு

தாய் ஒருவர் விஷம் கொடுத்து மகன் உயிரிழப்பு!

(UTV | கொழும்பு) –  தாய் ஒருவர் விஷம் கொடுத்து மகன் உயிரிழப்பு!

சமீபத்தில் தாயொருவர் தனது மகனையும் மகளையும் விஷம் குடிக்க வைத்து தானும் விஷம் அருந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் இன்று மகன் உயிரிழந்துள்ளதாக நால்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லொலுவாகொட, தலஹேன பிரதேசத்தை சேர்ந்த ஏ.ஏ. பேஷன் சசிந்தா என்ற ஐந்து வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுக்கும் போது தாயும் விஷம் அருந்தியதாக நால்ல பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இச்சம்பவத்தில் தாயார் தற்போது கவலைக்கிடமான நிலையில் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 8 வயதுடைய மகளும் ஆபத்தான நிலையில் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், குறித்த பெண் அதிக கடனில் இருந்ததாக விஷம் அருந்திய பெண்ணின் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர். எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் நால்ல பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சிறுவனின் தாய் விஷம் கொடுத்து மயக்கமுற்ற பின் பக்கத்து வீட்டாரிடம் தெரிவித்து தாயை காப்பாற்றுமாறு கூறி தாய் குடித்ததை தனக்கும் கொடுத்ததாக தெரிவித்ததை அடுத்து சிறுவனும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு நாடு முடக்கப்படாது

திருக்கோணேஸ்வரர் ஆலய வருடாந்த திருவிழா ஒத்திவைப்பு

உறுதிச் சான்றிதழை ஒரே நாளில் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு.