அரசியல்உள்நாடு

தாயக மக்கள் கட்சியில் இணைந்த தஹாம் சிறிசேன, ராஜிகா விக்ரமசிங்க

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ராஜிகா விக்ரமசிங்க மற்றும் தஹாம் சிறிசேன ஆகியோர் இன்று (03) தாயக மக்கள் கட்சியில் இணைந்துள்ளனர்.

கொழும்பில் உள்ள அக்கட்சியின் கட்சியின் தலைமையகத்தில் ​வைத்து அவர்கள் தாயக மக்கள் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் பிரவேசித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்க, தாயக மக்கள் கட்சியின் கேகாலை மாவட்ட மற்றும் தெதிகம அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனா, பொலன்னறுவை மாவட்ட தாயக மக்கள் கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, பொலன்னறுவை மாவட்ட இணைப்பாளராக சமிந்து குமாரசிங்கவும், கண்டி மற்றும் உடுநுவர மாவட்ட இணைப்பாளராக தக்சில பிரேமசிறியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கண்டி ஹேவாஹெட்ட அமைப்பாளராக சஞ்சீவ சுரவீரவும் கண்டி யட்டிநுவர அமைப்பாளராக தக்சில செனவிரத்னவும் ரத்கம அமைப்பாளராக துசித திலங்க ஜயசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

இஸ்லாஹியா அதிபர் உஸ்தாத் அஷ்ஷெய்க் ஹதியத்துல்லாஹ் முஹம்மத் முனீர் சற்று முன் காலமானார்!

வெளிநாடு செல்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

தர்கா நகரில் 14 வயது சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் – விசாரணைகள் ஆரம்பம் [VIDEO]