உள்நாடுவணிகம்

தானியங்களை களஞ்சியப்படுத்த களஞ்சியசாலை

(UTV|கொழும்பு)- அரச தானிய பாதுகாப்பு மத்திய நிலையம் ஒன்று எம்பிலிப்பிட்டியவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

விவசாயிகளின் உற்பத்திகளுக்கு நிலையான விலை கிடைக்கும் வரை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கி அவற்றை களஞ்சியப்படுத்துவதற்கு இதன் மூலம் வசதிகள் செய்யப்படும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல், மிளகு, பாசிப்பயறு, சோளம் , எள்ளு, கௌப்பி ,குரக்கன் போன்ற தானிய வகைகள் இங்கு களஞ்சியப்படுத்த முடியும். உற்பத்திகளை குறைந்த விலையில் விவசாயிகள் விற்பதை தடுப்பதே இதன் நோக்கமாகும்.

அவசர பணத்தேவை ஏற்படும் சந்தர்ப்பத்தில் தானியங்களை களஞ்சியப்படுத்துவதற்கு அமைவான பெறுமதியில் 50 சதவீதத்தை பெற்றுக்கொள்ளும் வசதியும் விவசாயிகளுக்கு இதன் மூலம் கிடைத்துள்ளது.

களஞ்சியப்படுத்தப்பட்ட தானியங்களை விற்பனை செய்யும் போது இந்த கொடுப்பனவு அறவிடப்படும். 5 ஆயிரம் மெற்றிக தொன்; தானியங்களை களஞ்சியப்படத்துவதற்கான வசதிகளை எம்பிலிப்பிட்டிய களஞ்சியசாலை கொண்டுள்ளது.

Related posts

திரிபோஷா பற்றிய புதிய தகவல்

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மீன்பிடிக் கைத்தொழிலை பாதுகாப்பது தொடர்பிலான ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை