வகைப்படுத்தப்படாத

தாதியர்கள் உள்ளிட்ட மருத்துவ சேவையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

(UTV|COLOMBO)-தாதியர்கள் உள்ளிட்ட மருத்துவ சேவையாளர்களின் ஒன்றிணைந்த சங்கத்தினர் இன்று நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

17 சுகாதார தொழிற்சங்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆதரவளித்துள்ளன.

தாதியர் சேவையில் நிலவும் சம்பள பிரச்சினைகள், மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படாமை உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய தொழிற்சங்க ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.

இதனிடையே நேற்று (22) குறித்த தொழிற்சங்கத்தினர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலை மற்றும் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் 04 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டிருந்தனர்.

இதனால், மருத்துவ சேவைக்காக வருகை தந்திருந்த நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

தாதியர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சந்தரப்பம் பெற்றுக் கொடுக்கப்பட்டால் எவ்வேளையிலும் பணிப்பகிஷ்கரிப்பை கைவிட தயார் என தேசிய தொழிற்சங்க ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னபிரிய மேலும் தெரிவித்தார்.

 

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv 
என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

 

Related posts

පූජිතගෙන් ප්‍රකාශයක් ගන්න CID සුදානම්

அனைத்து ஊடகங்களும் ஒன்றிணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

சமூகங்களுக்கிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் தேவை