உள்நாடு

தவறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(UTV | கொழும்பு) – பாடசாலை மாணவர்களை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அழைத்து செல்லாத சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.

இன்றைய தினம் மேல் மாகாணத்தில் உள்ள சகல தர மாணவர்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முகக்கவசங்கள் அணியாமல் வாகனங்களில் பயணிப்பதற்கு இடமளிக்க கூடாது என்றும் இந்த விடயம் தொடர்பில் சகல பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாணவர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அவர்கள் பயணிக்கும் வாகனங்களின் சாரதி, நடத்துனர் அல்லது உரிமையாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை

வைத்தியர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பு!

‘IMF ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும்’ – சஜித்