கேளிக்கை

தள்ளிப்போகிறதா தர்பார்?

(UTV|COLOMBO) – ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் வெளியீடு திகதியை ஒத்திவைக்குமாறு தயாரிப்பாளர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜவேல் கிருஷ்ணா இயக்க, ஆர்.தாமோதரன் தயாரித்த பெற்றோர், ஆசிரியர் கண்டிப்பு இல்லாமல் வளரும் பிள்ளைகள் எதிர்காலம் எவ்வாறு சிதையும் என்பதை மையமாக வைத்து ‘பிழை’ படம் உருவாகியிருக்கிறது. சென்னை சர்வதேச படவிழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்ற இந்த படம் எதிர்வரும் 3 ஆம் திகதி வெளியாகிறது.

எனவே படம் சுவாரசியமாக எல்லோரும் ரசிக்கும் வகையில் இருக்கும். படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த காலகட்டத்துக்கு இது மிகவும் அவசியமான படம் என்று படம் தயாரிப்பாளர் பாராட்டியுள்ளனர்.

பொங்கலுக்கு வெளியிட இருக்கும் தர்பார் படத்தை 9 ஆம் திகதி வெளியிட இருக்கிறார்கள். இதனால் முந்தைய வாரங்களில் வெளியாகும் சின்ன படங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே தர்பார் படத்தை பொங்கல் அல்லது போகி பண்டிகைக்கு வெளியிட்டால் எங்களை போன்ற சின்ன படங்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

Related posts

தொழிலதிபரான அஜித்கை பட நடிகை

கைதாவாரா செளந்தர்யா ரஜினிகாந்த்?

இனி இளையராஜா பாடல்களை பாடப்போவதில்லை – எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அதிரடி முடிவு