விளையாட்டு

தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியினை நிராகரித்த மஹேல

(UTV | கொழும்பு) – இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக தன்னை நியமிக்கும் யோசனையை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நிராகரித்துள்ளார்.

கிறிஸ் சில்வர்வுட் இதற்கு முன்பு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்டு வந்தார்.

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் படுதோல்வி அடைந்ததால் அவர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

தற்போது இலங்கை அணியின் பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கிறிஸ் சில்வர்வுட் நியமிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் அணிகளுக்கு இரண்டு புதிய பயிற்சியாளர்களை நியமிக்க இங்கிலாந்து கிரிக்கெட் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

அதன்படி, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட முன்வைக்கப்பட்ட யோசனையை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நிராகரித்துள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் நேற்று (22) செய்தி வெளியிட்டுள்ளன.

அவரைத் தவிர, அவுஸ்திரேலிய முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங்கும் குறித்த பதவியை ஏற்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து டெஸ்ட் பயிற்சியாளர் பதவிக்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஓடிஸ் கிப்சன் பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Related posts

46-வது வயதிற்குள் அடியெடுத்தும் வைக்கும் சச்சின்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குசல் விளையாடுவது சந்தேகம்?

தனது அடுத்த இலக்கு இதுவே