உள்நாடு

தலைமன்னாரில் 79 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றல்

(UTV | கொழும்பு) –  தலைமன்னார் – ஊருமலை கடற்கரையில் 79 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஐஸ் (Crystal Methamphetamine -ICE) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

வடமத்திய கடற்படை முகாமினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது நேற்று (14) நள்ளிரவு ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 9.9 கிலோ ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

படகொன்றில் போதைப்பொருளை கொண்டு வந்த போது, 28 மற்றும் 36 வயதுடைய தலைமன்னார் ஊருமலை பகுதியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

Related posts

இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டங்கள் குறித்து வெளியான செய்தி

editor

இன்றும் நாட்டில் சுழற்சி முறையில் மின்தடை

பொதுத் தேர்தல் – சுகாதார வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி இன்று