அரசியல்உள்நாடு

தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தி – இராதாகிருஷ்ணன்

தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டிருப்பதை எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் வெளிகாட்டுகின்றன.

இதே நிலை பாராளுமன்ற தேர்தலிலும் ஏற்படும் என மலையக மக்கள் முன்னணி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவரும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பொதுவாக இலங்கை அரசியலில் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து அதில் வெற்றிப்பெறும் ஜனாதிபதி மற்றும் அவருடைய கட்சி அடுத்து வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் பாரியளவில் வெற்றிப்பெறுவதை நாம் கடந்த காலங்களில் பார்த்திருக்கின்றோம்.

ஆனால் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து ஒரு மாதத்தின் பின்பு நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 50 வீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெற முடியாமல் இருக்கின்ற ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதற்கு காரணம் இந்த ஜனாதிபதியின் மீதும், அரசாங்கத்தின் மீதும் அதிருப்தி ஏற்பட்டிருப்பது காட்டுகின்றது.

ஜனாதிபதி எதிர்கட்சியில் இருந்த போது தான் பதவிக்கு வந்தால் 48 மணித்தியாலயத்தில் பல மாற்றங்கள் செய்வதாக கூறினார்.

பல அதிசயங்கள் செய்யக்கூடிய திறமை என்னிடமும் தனது குழுவினரிடமும் இருப்பதாக கூறினார்.

ஆனால் இப்பொழுது நான் மந்திரவாதியோ, தந்திரவாதியோ இல்லை என கூறுகினார். இது தான் உண்மையான நிலைமை பதவிக்கு வருவதற்கு முன்பும் எதிர்கட்சியில் இருந்துக் கொண்டும் எதை வேண்டுமானாலும் பேசலாம்.

ஆனால் நாட்காலியில் அமர்ந்தவுடன் தான் கூறியதை நடைமுறைப்படுத்துவதில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றது என்பதை அப்பொழுது தான் புரிந்துக் கொள்ள முடியும்.

எனவே, நிதானமாக சிந்தித்து செய்யக்கூடிய விடயங்களை மாத்திரம் மக்களிடம் கூற வேண்டும்.

அதனையே ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும், ஏனைய அங்கத்தவர்களும் செய்கின்றார்கள்.

இதனடிப்படையில் நாங்கள் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் வெற்றிகளை கொண்டு புதிய அரசாங்கத்தை அமைக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

-கிரிஷாந்தன்

Related posts

செந்தில் தொண்டமானின் கோரிக்கையை ஏற்ற ஜனாதிபதி ரணில்.

கொரோனாவால் உயிரிழந்த இரண்டாவது நபரின் இறுதிக் கிரியைகள்

3 மணி நேர ‘நெஞ்சறை’ சத்திர சிகிச்சையில் உயிர் பிழைத்த இளைஞர் – மன்னார் வைத்தியசாலையில் சம்பவம்!