உலகம்

தற்போது 75 நாடுகளில் MONKEYPOX

(UTV | கொழும்பு) – அமெரிக்காவில் 3,800க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை காய்ச்சலால் (MONKEYPOX) பாதிக்கப்பட்டுள்ளதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமையை கருத்திற்கொண்டு நாட்டில் சுகாதார அவசரநிலையை பிரகடனப்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,000ஐ நெருங்கியுள்ளது. தற்போது 75 நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, ஸ்பெயினில் இருந்து அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் இருந்து 3,100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் ஜெர்மனியும் இங்கிலாந்தும் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன. அந்த நாடுகளில் இருந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முறையே 2,350 மற்றும் 2,200 ஆகும்.

அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதை ஒடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைகளை வெள்ளை மாளிகையில் இருந்து கண்காணிக்க சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி நியமிக்கப்பட உள்ளார். நாட்டில் குரங்கு அம்மை நோய் தடுப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் வைரஸ் பரவலை அடக்கும் முயற்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

Related posts

இளவரசர் பிலிப்பிற்கு சனியன்று இறுதி அஞ்சலி

ஈரானை குறி வைக்கும் இஸ்ரேல் பிரதமர்

மீண்டும் ஏவுகணை சோதனையில் இறங்கிய வடகொரியா