சூடான செய்திகள் 1

தரம் 5, A/L: ஓகஸ்ட் 30, 31 முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை

(UTVNEWS | COLOMBO) -இம்முறை கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை நடைபெற உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை உயர்தர பரீட்சைக்காக புதிய கற்கைநெறி சிபாரிசின் கீழ் 198 229 பரீட்சாத்திகளும், பழைய பாடத்திட்டசிபாரிசின் கீழ் 139 475 பரீட்சாத்திகளும் தோற்றவுள்ளனர்.

இதற்கமைய 30 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியிலிருந்து பரீட்சை நிறைவடையும் வரை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி பரீட்சைக்கு தோற்றவுள்ள மொத்த பரீட்சாத்திகளின் எண்ணிக்கை 337 704 என்பதுடன், 2678 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது.

இதேவேளை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், சிங்கள மொழியில் 255,529 பரிட்சாத்திகளும், தமிழ் மொழியில் 83,840 பரிட்சாத்திகளும் தோற்றவுள்ளனர்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மொத்த பரீட்சாத்திகளின் எண்ணிக்கை 339,369 என்பதுடன், 2,995 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெற உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இம்மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் பரீட்சை நிறைவடையும் வரை தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

மில்கோ தலைவர் இராஜினாமா!

ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்யுமாறு உத்தரவு

முன்னாள் கடற்படைத் தளபதியை கைது செய்ய நடவடிக்கை