உள்நாடுசூடான செய்திகள் 1

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதித்த 18 மாணவர்கள்

2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்று (24) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அதன்படி, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர், 188 மதிப்பெண்களை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், 17 மாணவர்கள் 187 மற்றும் 186 என்ற மதிப்பெண்களை பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதிக மதிப்பெண் பெற்ற 18 மாணவர்களில் 11 பேர் ஆண் பிள்ளைகள் என்றும் அவர் தெரிவித்தார்.

2024 ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் 319,284 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில் அதில் 51,244 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

அதன்படி, பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் சதவீதம் 16.05% ஆகும்.

இது கடந்த ஆண்டை விட அதிகமாகும்.

2023 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 15.12% பேர் சித்தியடைந்திருந்தனர்.

மேலும், இந்த ஆண்டு பெறுபேறுகளின் படி, 77.96% மாணவர்கள் 70 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றுள்ளனர்.

இதுவும் கடந்த ஆண்டை விட சற்று அதிகமாகும்.

2023 ஆம் ஆண்டில், 77.75% மாணவர்கள் 70 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றிருந்தனர்.

மேலும், பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 37.70% பேர் 100 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றுள்ளனர்.

இருப்பினும், 2023 உடன் ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும்.

கடந்த ஆண்டு, பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 45.06% பேர் 100 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புலமைப்பரிசில் மற்றும் பொது தராதர சாதாரண தர பரீட்சை முடிவுகளின் தேசிய மட்ட பெறுபேறுகளை வெளியிடுவதில்லை

விமல் – கம்மன்பிலவுக்கு பின் வரிசைக்கு

இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் வேலை நிறுத்தப் போராட்டம்!