வகைப்படுத்தப்படாத

தரம் 1ல் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப இறுதித் திகதி நீடிப்பு

(UDHAYAM, COLOMBO) – 2018ல் தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் இறுதித் திகதி ஜுலை மாதம் 10ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் 30ம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைய இருந்தது. எனினும் தபால் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதில் சில பெற்றோர் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் இதனால் விண்ணப்பத்தை ஏற்கும் இறுதித் திகதியை நீடிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கால அவகாசத்தை நீடித்துள்ள கல்வி அமைச்சு இதுவரை விண்ணப்பங்களை தபாலில் சேர்க்காத பெற்றோர்கள் தமது விண்ணப்பங்களை நேரடியாக பாடசாலை அதிபரிடம் கையளிக்க முடியும் என்றும் அறிவித்துள்ளது.

இதுபற்றி சகல பாடசாலை அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை கையேற்கும் அதிபர்மார் அதனை ஏற்றுக் கொண்டதற்கான எழுத்துமூல ஆதாரத்தை சமர்ப்பிப்பார்கள் என்று கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் ஜயந்த விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

 

Related posts

Premier to testify before PSC on Aug. 06

இன்னும் 3 நாட்களில் காலநிலையில் மாற்றம்..

கிரீஸ் நாட்டில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்