வகைப்படுத்தப்படாத

தம்மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்தாரா கிறிஸ்ட்சர்ச் தாக்குதல்தாரி?

கிறிஸ்ட்சர்ச்சில் தாக்குதல் நடத்தி 51 முஸ்லிம்களை படுகொலை செய்த பயங்கரவாதி, தம்மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.

அவரது வழக்கு நேற்று நியுசிலாந்தின் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் அதன்போது 29 வயதான சந்தேகநபர் தொலை காணொளி தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றில் பிரசன்னமானார்.

இவர் மீது 51 பேரை கொலை செய்தமை, 40 கொலை முயற்சி மற்றும் பயங்கரவாத செயற்பாடு ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.எனினும் அவரது சட்டத்தரணி இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிராகரித்தார்.

கடந்த மார்ச் மாதம் 15ம் திகதி முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த வேளையில் கிறிஸ்ட்சர்ச் பள்ளிவாசல்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கு அடுத்த ஆண்டு மே மாதம் 4ம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டதுடன், வழக்கு மீளாய்வுக்காக ஆகஸ்ட் 16ம் திகதி எடுத்துக் கொள்ளப்படும்.

அதுவரையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர் தடுப்பு காவலில் வைக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

ஹகிபிஸ் புயல் தாக்கியதில் 23 பேர் உயிரிழப்பு

බන්ධනාගාර බුද්ධි ඒකකයක් පිහිටුවීමට කැබිනට් අනුමැතිය.

US destroyed Iranian drone in Strait of Hormuz, says Trump