உள்நாடுசூடான செய்திகள் 1

தமிழ் பிரதிநிதிகள் அனைவரையும் ஒரே மேசையில் சந்திக்கின்றார் அமெரிக்க தூதுவர்!

(UTV | கொழும்பு) –

வடக்கு – கிழக்கு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தமிழ்க் கட்சிகளின் தலைவர்களையும் இன்று ஒரே மேசையில் சந்திக்கின்றார் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்தியத் தூதுவர் மற்றும் அமெரிக்கத் தூதுவர் இருவரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனை நேரில் சென்று சந்தித்திருந்தனர்.

இந்த நிலையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அந்தக் கட்சியின் பேச்சாளரும் வெளிவிவகார விடயங்களைக் கையாள்பவருமான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் சார்பில் அதன் தலைவர் த.சித்தார்த்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் அதன் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரை இன்று மதியம் அமெரிக்கத் தூதுவர் சந்தித்து கலந்துரையாடினார்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!!

காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி மாணவர்களின் அகால மரணம் ஆறாத்துயரை ஏற்படுத்துகிறது” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்

editor

இன்று இரவும் ஊரடங்கு சட்டம்