உள்நாடு

தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த சிறிதரன்!

(UTV | கொழும்பு) –

கொள்கை ரீதியாக ஒருமித்துச் செயற்பட முன்வருமாறு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறிருந்ததோ அவ்வாறான நிலையை தமிழ் மக்களின் அரசியல் ஏகப் பிரதிநிதிகள் என்ற நிலையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எய்த வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் சகல தமிழ்க் கட்சிகளும் தம் கட்சிகளின் நலனை முன்னிறுத்தாமல் மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ்த் தேசியத்தின் பாதையில் ஓரணியாக ஒன்றிணையுமாறு அழைப்பு விடுப்பதாக சிறீதரன் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியத்தைப் பலப்படுத்த வேண்டும் என்ற நோக்குடனேயே தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்காக போட்டியிட்டு, தற்போது தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் புத்துயிரூட்டுவதே தன் முன்னுள்ள முதற்பணி என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். சகல தமிழ்த் தேசியக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் செயற்பாட்டை துரித கதியில் முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் உடனடியாக பாராளுமன்றத்தை கலைப்பேன் – அனுர

editor

மஹர சிறைச்சாலை அமைதியின்மை : உயிரிழப்பு அதிகரிப்பு

பசிலின் இந்தியா பயணம் ஒத்திவைப்பு