உள்நாடு

தமிழக மீனவர்கள் 11 பேர் கைது

(UTVNEWS | INDIA) –தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்துள்ளனர்.

மேலும், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் ராமேஸ்வரத்தை சேர்ந்த ஒரு விசைப்படகையும், அதில் இருந்த 11 மீனவர்களையும்  கடற்படையினர் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் 11 பேரையும் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

Related posts

அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்படும் தபால் சேவை!

லொத்தர் சீட்டு விற்பனை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 115ஆக உயர்வு