அரசியல்உள்நாடு

தபால் மூல வாக்காளர்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அவசர அறிவிப்பு

வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ள 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் நேற்று (03) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எச்சந்தர்ப்பத்திலும் குறித்த திகதி நீட்டிக்கப்படாது என அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், தபால் மூல விண்ணப்பப் படிவங்களை மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் அல்லது தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான (www.elections.gov.lk)க்கு பிரவேசித்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் விடுமுறை

ஜனவாி 23 முதல் விமான நிலையங்கள் வழமைக்கு

கனடாவில் புகலிடம் கோரும் வெளிநாட்டவர்களை நாடு கடத்த ஏற்பாடு!